மேலும் செய்திகள்
அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினம்
17-Nov-2024
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் 98ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, நாளை மறுதினம் அரவிந்தர் அறையை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், தங்கியிருந்த அரவிந்தர், 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பொன்னொளி பூமிக்கு வந்ததை, உணர்ந்து, அதன்பின் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார்.அதனையொட்டி, அந்த நாள் ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஆண்டுதோறும் நவ., 24ம் தேதி சித்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி 98ம் ஆண்டு சித்தி தினமான வரும் 24ம் தேதி அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6:00 மணிக்கு ஆசிரம உறுப்பினர்களின் கூட்டு தியானம் நடக்கிறது.பின், அரவிந்தர் வாழ்ந்த அறை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்காக மதியம் 12:00 மணி வரை திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
17-Nov-2024