உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரெய்லர் பெட்டியுடன் டிராக்டரை திருடிய சீர்காழி வாலிபர் புதுச்சேரியில் கைது

டிரெய்லர் பெட்டியுடன் டிராக்டரை திருடிய சீர்காழி வாலிபர் புதுச்சேரியில் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ஏ.எப்.டி., திடல் எதிரில் நிறுத்தி இருந்த டிராக்டரைடிரெய்லர் பெட்டியுடன் திருடிச் சென்ற சீர்காழி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி நைனார்மண்டபம், கவிக்குயில் வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜ், 43; கடந்த 18 ம் தேதி தனது டிராக்டர் மற்றும் டிரெய்லர் பெட்டியில்,உரம் ஏற்றி கோர்ட் வளாகத்தில் உள்ள கார்டன் பகுதியில் இறக்கி வைத்தார்.இரவு தனது டிராக்டர் மற்றும் டிரெய்லர் பெட்டியை, ஏ.எப்.டி., புதிய பஸ் நிலையத்தின் எதிர்பக்கத்தில் சாலையோரம் நிறுத்தி சென்றார். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, டிராக்டர், டிரெய்லர் பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின்பேரில், சப்இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், மணிமொழி, ராமலிங்கம், வடக்கு கிரைம் சப்இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி நாராயணன், பெரியண்ணசாமி தலைமையிலான குழுவினர் டிராக்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1 மணிக்கு, மர்ம நபர்டிராக்டர் திருடிச் செல்லும் காட்சி பதிவானது. அடுத்தடுத்த சி.சி.வி.டி., காட்சிகள் மூலம் டிரெய்லர் பெட்டி நெல்லித்தோப்பு சந்திப்பு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.டிராக்டர் எஞ்சினை மட்டும் மர்ம நபர் திருடிக் கொண்டு வில்லியனுார் வழியாக தப்பிச் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.திருவண்டார்கோவில் அருகே டிராக்டருடன் சென்ற மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.விசாரணையில், சீர்காழி, புதுப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோவில், குளத்தங்கரை தெருவைச் சேர்ந்த வரதராஜன், 29; என்பது தெரியவந்தது அவரை கைது செய்தனர்.திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் டிராக்டரை திருடிச் சென்ற நபரை கைது செய்த உருளையன்பேட்டை மற்றும்வடக்கு கிரைம் குழுவை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ