உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வலை பின்னும் கூடம் அமைக்க இடம் தேர்வு; அதிகாரிகள் பார்வை

 வலை பின்னும் கூடம் அமைக்க இடம் தேர்வு; அதிகாரிகள் பார்வை

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மீன் வலை பின்னும் கூடம் அமைக்கும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு, ஆலோசனை நடத்தினர். வீராம்பட்டினத்தில் மீன் வலை பின்னும் கூடம் இல்லாமல், மீனவர்கள் அவதிப்பட்டனர். வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையெடுத்து, மீன்வளத்துறை சார்பில், 4 வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான இடத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில், கவர்னரின் செயலர் மணிக்கண்டன் கடற்கரை பகுதியில் நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், வீராம்பட்டினம் மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர். வலை பின்னும் கூடத்தில், கழிப்பறை வசதிகள், வீராம்பட்டினத்தில் மண் அரிப்பை தடுக்க, கருங்கற்கள் கொட்ட வேண்டும். முகத்துவாரம் பகுதியில், மண் அகற்றும், டிரஜ்ஜிங் இயந்திரத்தை நிரந்தரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மீனவர்கள் முன்வைத் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை