மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு திட்டம் பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஐ.இ.இ.இ., மெட்ராஸ் பிரிவு மாணவர் செயல்பாட்டுக் குழு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி கல்லுாரி கருத்தரங்கூடத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளர் டாக்டர் கோவிந்தராஜ், ஆர்.ஜி.ஆர். அகாடமி நிறுவனர் ஷியாம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ் 2 மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். பின் மாணவர்களுக்கு எதிர்கால கனவு திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறை குறித்து பேசினர். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. டீன் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், மாநாட்டு குழு தலைவர் சுதாகர், துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரி வேலை வாய்ப்பு டீன் ஜெயக்குமார் நன்றி கூறினார்.