மேலும் செய்திகள்
பாண்டெக்ஸ் ஊழியர்கள் 16வது நாளாக போராட்டம்
14-May-2026
புதுச்சேரி: புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து, குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில், நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத் தலைவர் பழனிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராசு, இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன், பொருளாளர் ஆனந்தன், சிவக்குமார் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. இதனால், ஊழியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து, பள்ளி, கல்லுாரிகள் திறப்பு காரணமாக குழந்தைகளுக்கு கல்வி கட்டணங்கள் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நிலுவை சம்பளத்தை உடனே வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என, வலியுறுத்தினர்.
14-May-2026