உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போகி கொண்டாட்டத்தால் சூழ்ந்த புகை மூட்டம்

போகி கொண்டாட்டத்தால் சூழ்ந்த புகை மூட்டம்

புதுச்சேரி: போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிக்கப்பட்டதால், புதுச்சேரி நகரத்தில், புகை மூட்டமாக காணப்பட்டது.தை மாதத்தை வரவேற்கும் விதமாக நேற்று புதுச்சேரியில், போகி பண்டிகையை கொண்டாடினர். பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் ரசாயன பொருட்களை எரிக்க கூடாது என சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்திருந்தது. இந்நிலையில், நகர மற்றும் கிராம பகுதிகளில் நேற்று அதிகாலையிலேயே சிறுவர்கள், பெரியவர்கள், தங்களது வீட்டில் முன்பு, பழைய பாய், பேப்பர் உள்ளிட்ட பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். அதிகாலை நேரத்தில், லேசான பணி இருந்ததால், அதனுடன், போகி பண்டிகையில், தீ மூட்டத்தால், நகர பகுதியில், புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயிட்டு எரித்த பொருட்களின், சாம்பல்களை மக்கள் தெரு ஓரப்பகுதியில் வைத்தனர். அதனை, நகராட்சி துாய்மை பணியார்கள் அகற்றினர்.அதனை தொடர்ந்து, தை மாதத்தை வரவேற்க்கும் விதமாக, மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, மாவிலையில், தோரணங்கள் அமைத்து, வீடுகளில் பூஜை செய்தனர். இன்று, பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை