பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் புகை வெளியேறியதால் பரபரப்பு
பாகூர் : பாகூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறிதால் பரபரப்பு நிலவியது. பாகூர் அக்ரஹார வீதியில் பி.எஸ்.என்.எல்., கிளை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம், கடந்த சில ஆண்டுகளாக சரிவர செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. இந்நிலையில் நேற்று மதியம் 2:30 மணியளவில், அலுவலகத்தின் உள்ளே இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அதனை கண்டு, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஊழியர் ஒருவர் துணையுடன் கதவை திறந்து உள்ளே சென்று, சுவற்றில் இருந்த மின்சார சர்க்யூட் லைன் போர்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.