மேலும் செய்திகள்
மின்கம்பியில் சிக்கிய பாம்பால் பரபரப்பு
31-Oct-2026
வில்லியனுார்: வில்லியனுார் அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை மீட்டனர். வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின்; கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் செப்டிக் டேங்க் அமைப்பதற்கு புதியதாக சிமென்ட் உரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று மாலை 5:30 மணி அளவில், செப்டிக் டேங்க் உரைக்குள் ஒரு நல்ல பாம்பு இருப்பதை கண்டு ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வெகு நேரமாகியும் வனத்துறை ஊழியர்கள் வரவில்லை. இதையடுத்து, குமாரப்பாளையத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் விநாயகத்திற்கு தகவல் தெரிவித்தார். இரவு 7:30 மணியளவில் அங்கு வந்த விநாயகம், ஆறு அடி நீள நல்ல பாம்பை மீட்டு, எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
31-Oct-2026