உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக சேவகர் பிறந்த நாள் விழா

சமூக சேவகர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி : முதலியார்பேட்டை, அனிதா நகர், பச்சைவாழியம்மன் மக்கள் நற்பணி மன்ற தலைவர், சமூக சேவகர் கர்ணன் (எ) மனோகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் கர்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 1,500 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, சர்க்கரை, கோதுமை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.முன்னதாக கன்னிக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில், சக்திவேல் பரமானந்த சித்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பிறந்தநாளையொட்டி முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், லாஸ்பேட்டை, காலாப்பட்டு ஆகிய தொகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், புதுச்சேரி நகரப்பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கர்ணனுக்கு முதலியார்பேட்டை பா.ஜ., நியமன எம்.எல்.ஏ., செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கரன், அசோக் பாபு, என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் வீரபத்திரன், அ.தி.மு.க. நிர்வாகி சரத்செந்தில், கணபதி, ஜீவா, வேத்புரி கைப்பந்து சங்க செயலாளர் விக்ரம், பேராசிரியர் கர்ணா, வணங்காமுடி, லட்சுமி காந்தன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி