உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் சிதறிய மண்ணை அகற்றும் ஊழியர்கள்

சாலையில் சிதறிய மண்ணை அகற்றும் ஊழியர்கள்

புதுச்சேரி: வள்ளலார் சாலை வரிவாக்கம், 40 அடி சாலையில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணியினால் சாலையில் கொட்டும் மண் குவியல்களை, அதன் ஊழியர்களே அகற்றி வருகின்றனர்.  புதுச்சேரி வள்ளலார் சாலை விரிவாக்கம், 40 அடி சாலையில் டி மார்ட் வணிக நிறுவனம் அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் காரணமாக, லாரிகள் மூலம் கட்டுமான பணிக்கான மண் மற்றும் கட்டுமான உபகரணங்கள் கொண்டு வரப்படுவதுடன், அங்கிருந்து கட்டட கழிவுகளும் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணியின் போது, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் களிமண்கள் சாலைகளில் கொட்டுவதால், அவ்வழியாக செல்லும்  வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை கருதில் கொண்டு சாலையில் கொட்டும் மண் குவியல்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டி மார்ட் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தேடிக் கண்டறிந்து அவற்றை அகற்றி சாலையை சுத்தமாக பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக அரசு கட்டடங்களோ அல்லது தனியார் கட்டடங்களோ கட்டுமான பணியின்போது, போக்குவரத்திற்கு இடையூராக பணிகளை மேற்கொள்ளும். ஆனால், இந்த தனியார் நிறுவனம் தங்களால் ஏற்படும் கட்டுமான குப்பைகளை, தங்களே சுத்தம் செய்து பராமரிப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி