மண் மாதிரி சோதனை செயல் விளக்கம்
புதுச்சேரி: மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் சூரமங்கலம் கிராமத்தில் தங்கி, ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கல்லுாரி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட அலுவலர் சவுமியா வழிகாட்டுதலின்படி, விவசாயிகளுக்கான மண் மாதிரி பரிசோதனை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.அதில், சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது விவசாய நிலத்தில் மண் மாதிரி பரிசோதனையின் அவசியம், அதன் பயன்களை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.