உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதம் குறித்து விரைவில் முடிவு: சொல்கிறார் சபாநாயகர்

இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதம் குறித்து விரைவில் முடிவு: சொல்கிறார் சபாநாயகர்

சென்னை: இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதம், எனது ஆய்வில் உள்ளது, சட்டசபை முடிந்த பின் முடிவு அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா, தன் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்தார். அது குறித்து, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின் முடிவு அறிவிப்பதாக, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு, சட்டசபை சிறப்பாக நடந்து வருகிறது. சபாநாயகராக நான் சிறப்பாக செயல்படுகிறேன் என்றால், இந்த பொறுப்பில் என்னை அமர வைத்த முதல்வருக்கு தான், அந்த பெருமை சேரும். அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தற்போது, அதை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை வழங்கினார். அந்த கடிதம், எனது ஆய்வில் உள்ளது. சட்டசபை முடிந்த பின் முடிவு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ