உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூப் கடை ஊழியருக்கு அரிவாள்  வெட்டு

சூப் கடை ஊழியருக்கு அரிவாள்  வெட்டு

புதுச்சேரி: உருளையன்பேட்டை அருகே சூப் கடை ஊழியரை வெட்டிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உருளையன்பேட்டை அ ம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் மணிகண்டன்,29; இவர் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சூப் கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், மணிகண்டனை திடீரென மிரட்டி, அவரை விரட்டி சென்று கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். அங்கிருந்த சிலர், மணிகண்டனை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் மனைவி சுகப்பிரியா அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை