உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு முதலிடம்

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு முதலிடம்

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், ஸ்பார்ட்டன்ஸ் அணி முதல் பரிசை வென்றது.தவளக்குப்பம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 18 ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இப்போட்டியில், ஐ.பி.எல்., விதிகளின்படி ஏலம் முறையில் 150 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 10 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டி லீக் முறையில் ஒவ்வொரு அணியும், இரு அணிகளுடன் மோதின. மூன்று மாதம் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்பார்டன்ஸ் அணியும், கிளாடியேட்டர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.இவ்விரு அணிகளில், முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர் அணி 20 ஓவரில் 145 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதன் பிறகு விளையாடிய ஸ்பார்ட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இவ்வணியை சேர்ந்த ஆதவன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்ப்டடார்.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், முதலிடம் பிடித்த ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு ரூ.60 ஆயிரம், இரண்டாம் இடத்தை பிடித்த கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ரூ.35 ஆயிரம், மூன்றாம் இடத்தை பிடித்த வாரியர்ஸ் அணிக்கு, ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசுகளை சபாநாயகர் செல்வம் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் உதயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை