UPDATED : ஆக 23, 2026 05:57 PM | ADDED : ஆக 23, 2026 05:51 PM
புதுச்சேரி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மாகேவிற்கு இன்று, நாளை பி.ஆர்.டி.சி., மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து பி.ஆர்.டி.சி., பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பி.ஆர்.டி.சி., சார்பில் வரும் 26ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மாகேவிற்கு இன்று (24ம்தேதி) மற்றும் நாளை (25ம் தேதி) மாலை 6.00 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல், 26 மற்றும் 27ம் தேதி மாகேவில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5.00 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கபடுகிறது. அதன் கட்டணமாக ரூ. 770 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன் பதிவிற்கு, புதுச்சேரி பஸ் நிலையம் மற்றும் மாகே பஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.