உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்

 சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறத. பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை அமாவாசையை முன்னிட்டு மூலவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையொட்டி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து திருக்கண்ணாடிஅறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை