உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இ.எஸ். ஐ., மண்டல அலுவலகத்தில்5ம் தேதி சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

 இ.எஸ். ஐ., மண்டல அலுவலகத்தில்5ம் தேதி சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக, மண்ட அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நாளை மறுநாள் (5ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ) மண்டல இயக்குனர் கிருஷ்ணகுமார் செய்திகுறிப்பு; 75ம் ஆண்டு நிறுவன தினம் மற்றும் சிறப்பு சேவை என இருவார விழாவை முன்னிட்டு, தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நாளை மறுநாள் (5ம் தேதி) மாலை 3:30 மணிக்கு புதுச்சேரி மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. எனவே தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பங்கேற்று தங்கள் இ.எஸ்.ஐ., தொடர்பான கோரிக்கைள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருந்தால், கடிதத்தில் குறிப்பிட்டு, ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ