மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
13-Nov-2025
அரியாங்குப்பம்: நாணமேடு சொர்ணா பைரவர் கோவில், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, ஹோம வழிபாட்டில், பொதுமக்கள் தரிசனம் செய்தனர். கடலுார் சாலை, நாணமேடு கிராமத்தில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமியில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நேற்று, ருத்ர ஜெப ஹோமம் மற்றும் பைரவி மஹா யாகம் நடந்தது. தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. சொர்ணா பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
13-Nov-2025