ஓய்வூதிய திட்டங்கள் குறித்து சிறப்பு கருத்தரங்கம்
புதுச்சேரி : அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம், அரசு ஊழியர் சம்மேளன அலுலகத்தில் நாளை நடக்கிறது.இதுகுறித்து சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி அறிக்கை:புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், வரும் 30ம் தேதிக்குள் ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 2 ஓய்வூதிய திட்டங்களில் எந்த திட்டம் பயனளிக்கும் என ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அந்தஓய்வூதிய திட்டங்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நாளை 24ம் தேதி மாலை 5:30 மணிக்கு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடக்கிறது.இதில், தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு கிளையின் துணைத்தலைவர் இளங்கோவன் பங்கேற்று விளக்கம் அளிக்கயுள்ளார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.