உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

புதுச்சேரி: வில்லியனுார் மற்றும் உழவர்கரை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வில்லியனுாரில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கலந்து கொண்டு வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது, அதன் அவசியம் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மக்களை அணுக வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். மேலும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, அவர்களை பணியில் சிறப்பாக ஈடுபட ஊக்கப்படுத்தினார். பயிற்சி முகாமில், வாக்காளர் பதிவு அதிகாரி புத்தி அகில், துணை தலைமை தேர்தல் அதிகாரி ஆதர்ஷ், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் குப்பன் மற்றும் விமலன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ