மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
10-Mar-2025
ஜி.டி.என். , கல்லூரியில் விளையாட்டு விழா
23-Mar-2025
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை கல்லுாரியில் நடந்த விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை கல்லுாரியில், கல்வியாண்டை நிறைவு செய்யும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு மைதானத்தில், இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், வாலிபால், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.அதனை தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மோனிஷா, தலைமை தாங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் ஆதவன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Mar-2025
23-Mar-2025