மேலும் செய்திகள்
சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா
25-Nov-2024
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா எண் - 1ல், 56 வது விளையாட்டு விழா, ஜிப்மர் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.பள்ளி முதல்வர் ராமபிரசாத் தலைமை தாங்கி, போட்டியினை துவக்கி வைத்தார். பள்ளி துணை முதல்வர் அங்கே சிங் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், கேந்திர வித்யாலயா சென்னை மண்டல முன்னாள் உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
25-Nov-2024