உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா  

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா  

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை வட்டம் 1 சார்பில் பெத்துசெட்டிப்பேட் அரசு தொடக்கப் பள்ளியில்  விளையாட்டு  போட்டிகள் நடந்தது. மாணவர்களின் திறமைகளையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பையும் வெளிக் கொண்டு வரும் நோக்கில், பள்ளி கல்வித்துறை வட்டம் 1 சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப்போட்டி பெத்துசெட்டிப்பேட் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஜாக்லின் வரவேற்றார். வட்டம் 1 பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா வாழ்த்துரை வழங்கினார். முதன்மை விருந்தினராக கல்வித்துறை துணை இயக்குநர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக  பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் ஆசிரியை கலைவாணி நன்றி கூறினார்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி