உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், கலை மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.குருவிநத்தம், பாரதி தாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், இசை நாற்காலி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவிற்கு நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர்கள் கோமளா, சாமுண்டீஸ்வரி, தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி நோக்கவுரையாற்றினார்.ஆசிரியர்கள் நான்சி, வனிதா, சாரதாம்பிகை, திவ்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பச்சை யம்மாள், குபேரன், சுகந்தி, அமலா ஆகியோர் பாராட்டி பேசினர். கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை