உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூத்த குடிமக்களுக்கான விளையாட்டு போட்டிகள்

மூத்த குடிமக்களுக்கான விளையாட்டு போட்டிகள்

புதுச்சேரி: மூத்த குடிமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 22ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் மூத்த குடிமக்களுக்கும், அவர்களது பேரப்பிள்ளைகளுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை, நடத்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மூத்த குடிமக்களுக்கான போட்டி, 22ம் தேதி காலை 9:00 முதல் 12:00 மணி வரை சாரதாம்பாள் நகர் செயின்ட் பேட்ரிக் பள்ளியில் நடக்க உள்ளது. ஆண்களுக்கு இசை நாற்காலி, பந்து கைமாறுதல், பொது அதிஷ்ட நகரம், மெதுவாக நடத்தல், கேரம் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பெண்களுக்கு இசை நாற்காலி, கோலப்போட்டி, சமைத்த சிறுதானிய உணவு போட்டி, பந்து கைமாறுதல், பாட்டுபோட்டி நடக்கிறது.இரண்டாம் கட்டமாக சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 29ம் தேதி காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயம், இசைநாற்காலி, ஓவியப்போட்டி, பந்து கை மாறுதல், பேச்சுபோட்டி நடக்கிறது. 6 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் பங்கேற்கலாம்.போட்டியில் பங்கேற்க வரும்போது அசல் உறுப்பினர் அடையாள அட்டை, பேரக் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0413 - 2293795, 9489476795 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ