உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளுனி பள்ளியில் விளையாட்டு விழா

குளுனி பள்ளியில் விளையாட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி குளுனி பள்ளியில் பனிப்பாறைகள், கடல் பாதுகாப்பு, கூட்டுறவு என்ற கருத்தை மையமாக கொண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில், குளுனி சபையின் தென்கிழக்கு மாகாணத் தலைவி லொரைன் பின்டோ, குளுனி இல்லத் தலைவி செலின், பள்ளி முதல்வர் ரோசிலி, துணை முதல்வர் பான்சி இன்ன, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தவைர் ராஜேந்திரன், செயலாளர் அமிதா டேனியல், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரி யர்கள் நைனா, அர்சலா மேரி, பாஸ்கல் மேரி, சுஜாதா உப்பல், ஊழியர் குளோரியா ஜெயந்தி, 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் அபயாம்பிகை ஆகியோர் பள்ளி நிர்வாகத்தால் கவுரவிக்கப்பட்டனர். விழாவில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளின் பல வண்ண கொடிகளின் அணி வகுப்பு நடந்தது. மழலையர் பள்ளி மாணவியர் கூட்டுறவும், பொருளாதாரமும் இணைந்து செயல்பட்டால் சிறந்த உலகை உருவாக்க முடியும் என்பதை பயற்சிகள் மூலம் வடிவமைத்து காட்டினர். தொடர்ந்து, ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள், அரசு பொதுத் தேர்வில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளியின் உப தலைவி பெட்ரிசியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை