போலீசாருக்கு பிட்னஸ் எஸ்.எஸ்.பி., உத்தரவு
புதுச்சேரி: போலீசார் மருத்துவ சான்றிதழை, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சீனியர் எஸ்.எஸ்.பி., அனிதாராய் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரியில் பணியாற்றும் போலீசார் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ரீதியாக தகுதியுடையவர் என சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகும். மருத்துவ பரிசோதனைக்கு பின், மருத்துவ அதிகாரி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார். சீனியர் எஸ்.பி., எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருக்கு கட்டாய மருத்துவ பரிசோதன செய்து அதன் வருடாந்திர அறிக்கையை தயார் செய்து வழங்க வேண்டும். மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் இல்லாத, வருடாந்திர அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த அறிக்கையை அதிகாரிகள் வரும் 30ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.