உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான இறகு பந்து போட்டி: டி ஷர்ட் அறிமுக விழா

மாநில அளவிலான இறகு பந்து போட்டி: டி ஷர்ட் அறிமுக விழா

புதுச்சேரி: மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெறுவதையொட்டி, அறிமுக விழா நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இறகு பந்து போட்டி, புதுச்சேரி ரோட்டரி எலைட்ஸ் மற்றும் பிரெஞ்சு பெதர் லீக் அமைப்பு சார்பில், வரும் நவம்பர் 1ம் தேதி, 2ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இப்போட்டி, சிவாஜி சிலை அருகில் உள்ள ஆடுகளம் பாட்மிட்டன் அகாடமியில் நடக்கிறது. இந்த போட்டி, தனி நபர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடக்கிறது. இதில், 9 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். போட்டிக்கான டி ஷர்ட் அறிமுக விழா, புதுச் சேரி தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது. ரோட்டரி எலைட்ஸ் தலைவர் சரவணன், பிரெஞ்சு பெதர் லீக் தலைவர் சத்தியநாராயணன், செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகம் செய்தனர். விழாவில் ரோட்டரி எலைட்ஸ் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர்கள் குணசேகரன், நமச்சிவாயம், கோவிந்தராஜன், ஜெயக்குமார், பச்சைநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !