மாநில அளவிலான நாடகப் போட்டி பிரசிடென்சி மாணவர்கள் சாதனை
புதுச்சேரி : முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் நாடகப் போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது.கல்வித்துறை மூலம் நடந்த இபோட்டியில், 38 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி பிராந்திய அளவில் முதலிடம் பிடித்து, தென்னிந்திய அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மாநில அளவில் நடந்த போட்டியின் நிறைவு விழாவில், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர். விழாவில், அரசு கொறடா ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் பரிசுகள் அனைத்தும் பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.