உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான கபடி போட்டி துவக்கம்

மாநில அளவிலான கபடி போட்டி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில கபடி சங்கம் சார்பில், 51ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டியினை ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி மாநில கபடி சங்கம் சார்பில், 51ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.கபடி சங்கம் தலைவர் விஜயராணி ஜெயராமன் தலைமை தாங்கினார். சங்க பொது செயலாளர் ஆறியசாமி வரவேற்றார். முன்னாள் பொது செயலாளர் தெய்வசிகமாணி, சங்கம் சி.இ.ஓ., சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசினார். போட்டியினை ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆனந்தம்மாள் ஆதினம் அறக்கட்டளை தலைவர் செல்வநாதன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் கபிலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ