உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான சிலம்பம் போட்டி காட்டேரிக்குப்பம் அரசு பள்ளி சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டி காட்டேரிக்குப்பம் அரசு பள்ளி சாதனை

புதுச்சேரி: பெங்களூரில் தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் காட்டேரிக்குப்பம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு பள்ளி மாணவிகளும், தொடக்கப்பள்ளி மாணவர்களும் கடந்த 17ம் தேதி பெங்களூர் அத்திப்பள்ளியில் நடந்த தேசிய அளவிலான நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். இதில் காட்டேரிக்குப்பம் பள்ளி மாணவிகள் ஹேமலோஷினி, பிரியங்கா, தர் ஷினி, பவித்ரா, லோகேஸ் வரி, பவதாரணி, தேவிபாலா, சாருமதி, காவியா, ஜான்சி ராணி, இனியா, வர்ஷா, ஆர்த்தி, அகிலா, தேன்மொழி, ராஜலட்சுமி, சங்கரி, லாவனி, நித்திஸ்ரீ இதில் பங்கு பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து புதுச்சேரி மாநிலத்துக்கு பெருமை சேர்த்தனர். பரிசு பெற்ற மாணவிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி, முதன்மை கல்வித்துறை அதிகாரி மோகன், வட்டம் 5 ஆய்வாளர் சொக்கலிங்கம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பள்ளி தலைமையாசிரியர்கள் கவிதா, சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.பயிற்சி அளித்த சங்கர், முத்துக்குமரன் ஆகியோரையும் அதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி