உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரோட்டரி காஸ்மாஸ் சங்கம் நடத்தும் மாநில அளவிலான திறனறிவு போட்டி

 ரோட்டரி காஸ்மாஸ் சங்கம் நடத்தும் மாநில அளவிலான திறனறிவு போட்டி

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காந்தி வீதி வாசவி பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான திறனறிவு போட்டி வரும் 1ம் தேதி நடக்கிறது. பாண்டிச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அருணா நினைவு அறக்கட்டளை இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான திறனறிவு போட்டியை முத்தியால்பேட்டை, வாசவி பன்னாட்டு பள்ளியில் வரும் 1ம் தேதி நடத்துகின்றன. காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இப்போட்டியில் தமிழ்பேச்சு, பாடல், கிராமிய நடனம், ஓவியப்போட்டிகள் நடக்கிறது. இப்போட்டி கிரேடு 1ல், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும், கிரேடு 2ல் 7, 8ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !