தமிழக முதல்வரை வரவேற்க மாநில அமைப்பாளர் அழைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி வருகை தரும் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை வரவேற்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மாநில அமைப்பாளர் சிவா அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடலுார் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (21ம் தேதி) காலை 11:00 மணியளவில் தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமானஸ்டாலின் புதுச்சேரி வருகிறார்.இதையொட்டி, புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் கோரிமேடு எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.இதில், மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று தலைவரை வரவேற்று, வழியனுப்ப வேண்டுகிறேன்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.