உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வயிற்று வலி: மூதாட்டி தற்கொலை

வயிற்று வலி: மூதாட்டி தற்கொலை

காரைக்கால்: வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருநள்ளார் அடுத்த அத்திப்படுகை கீழத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி அமிர்தவள்ளி, 80; இவர் சில மாதங்களாக வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. அதில் விரக்தியடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். திருநள்ளார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை