உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாரா பேட்மிட்டன் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

 பாரா பேட்மிட்டன் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

புதுச்சேரி: பேரா பேட்மிட்டன் போட்டியில், வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பாராட்டு தெரிவித்தார். நெல்லிதோப்பு தொகுதி, கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மாணவர் வெங்கடசுப்ரமணியன். இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர், எகிப்து நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவர் வெங்கடசுப்ரமணியனை முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது வெங்கடேசன், சேகர், இளவரசு, கஸ்தூரிபாய் நகர் அருள், ஆசாரி ரமேஷ் , கே.சி.நகர் அய்யனார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி