தொழில்நுட்ப பல்கலையில் மாணவர் பேரவை துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மெக்கட்ரானிக்ஸ் மாணவர் பேரவையின் துவக்க விழா கடந்த 23ம் தேதி நடந்தது. துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். மெக்கட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். இயந்திரப் பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் டீன் மகாதேவன், பேராசிரியர் மதியழகன், கரியமாணிக்கம் லுாகஸ் டி.வி.எஸ்., நிறுவனத்தின் முன்னாள் மனிதவளத் தலைவர் ஸ்ரீனிவாசன், ஓமன் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமுதக்கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில் மாணவர்கள் வடிவமைத்த மெகட்ரானிக்ஸ் மாணவர் பேரவையின் சின்னம் (லோகோ) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ரூபாஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.