உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திராணி செவிலியர் கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு விழா

இந்திராணி செவிலியர் கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு விழா

வில்லியனுார்: இந்திராணி செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள இந்திராணி செவிலியர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியை வெங்கடேஸ்வரா கல்வி குழும சேர்மன் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, செவிலியர் துறையின் மகத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து பேசினார். விழாவில் அறக்கட்டளை நிர்வாகி ராதா ராமச்சந்திரன், பொதுமேலாளர் சவுந்தரராஜன், முதன்மை இயக்க அதிகாரி வித்யா வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக செவிலியர் கல்லூரி முதல்வர் மல்லிகா வரவேற்றார். துணை முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ