உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரங்களை பாதுகாக்க மாணவியர் விழிப்புணர்வு

மரங்களை பாதுகாக்க மாணவியர் விழிப்புணர்வு

புதுச்சேரி; ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், மரங்களைப் பாதுகாப்பது குறித்து மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர்கள் ரமேஷ், பால மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரங்கள் பாதுகாப்பது குறித்து, மாணவியர் வாசகங்களை கூறி மோரீசான் தோட்டம் தெரு, ரெட்டியார்பாளையம் வழியாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை