பெங்களூரு கருத்தரங்கிற்கு மாணவர்களுக்கு தேர்வு
புதுச்சேரி: தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல மற்றும் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் பெங்களூரில் நடைபெற உள்ளது. அதையொட்டி, புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் போட்டிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். போட்டியில் தேர்வு செய்த மாணவர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சிவகாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், பேராசிரியர் சாருலதா, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சந்தான லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.