உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்கு பாலியல் தொல்லை ஆடியோ வைரலால் பரபரப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆடியோ வைரலால் பரபரப்பு

புதுச்சேரி: காரைக்கால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர், சமூக வலைதளங்களில் விடுத்துள்ள ஆடியோ பதிவு: புதுச்சேரி பல்கலை.,யின், காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவர் அழுதபடியே பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த மாணவி துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ் ஆப்பில் ஆபச படங்கள் அனுப்ப சொல்கிறார். இல்லை என்றால், 'இன்டெர்னல்' மதிப்பெண் போட மாட்டேன் என, மிரட்டுகிறார். பெற்றோருக்கு தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என, மாணவி அச்சத்தில் நடுங்கியபடி பேசுகிறார். இதேபோல் பல மாணவிகளுக்கு அந்த பேராசிரியர் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த ஆடியோவையே புகாராக ஏற்று போலீசாரும், பல்கலை நிர்வாகமும், சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளார். மகளிர் காங்., போராட்டம் இதையடுத்து, காங்., மகளிர் பிரிவினர் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, நேற்று மதியம் 12:30 மணிக்கு புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு சென்று, ஆணைய தலைவர் நாகஜோதியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆணைய தலைவர் நாகஜோதி, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்க மறுத்த மகளிர் காட்சியினர், அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி