உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் நிலையத்திற்கு, கூனிச்சம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி களப் பயணம் மேற்கொண்டனர்.அவர்களை இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வரவேற்றனர். போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் போலீஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ராஜகுமார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள், குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதற்கான தண்டனைகள், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் சைபர் கிரைம் மோசடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், மாணவர்களிடையே போலீசாரின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேச்சுச் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி