உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்காக புதுச்சேரியில் துணை கப்பல் தயார்

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்காக புதுச்சேரியில் துணை கப்பல் தயார்

புதுச்சேரியில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள 'துணை கப்பல்' வெள்ளோட்டத்திற்காக தயாராகி உள்ளது. உப்பளம் துறைமுகத்தில் செயல்படும் பி.என்.டி., நிறுவனம், ஆழ்கடலில் அழகை காணும் வகையில் செல்லும் 'செமி சப்மரைன்' படகு, நவீன கட்டுமரங்கள், கடலில் மீன் பிடித்து மகிழும் பிரிமியம் ரக விசைப்படகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன படகுகளை தயாரித்து வருகிறது. தற்போது இந்நிறுவனம், ஆழ்கடலில் எண்ணெய் ஆராய்ச்சியில் ஈடுபடும் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்காக 'மரைன் வெசல்' என்றழைக்கப்படும் 'துணை கப்பல்' ஒன்றை புதுச்சேரியில் முதன் முறையாக மரைன் கிரேடு அலுமினியத்தில் தயாரித்துள்ளது. 29 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலம், 1,500 குதிரை திறன் கொண்ட இரு நவீன இன்ஜின்கள் உள்ள இந்த கப்பல் 150 நாட்டிகல் மைல் துாரத்தில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. கப்பலை இயக்குபவர் உள்பட 42 பேர் இதில் பயணிக்கலாம். 8 பேர் தங்குவதற்கான 'ஏசி' அறைகள், நவீன உணவு தயாரிப்பு கூடம் மற்றும் நவீன கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. 90 டன் எடை கொண்ட இந்த துணை கப்பல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விரைவில் ஓ.என்ஜி.சி., நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது. மும்பை, கோவா வரிசையில் புதுச்சேரியில் குறைந்த செலவில் துணை கப்பல் தயாரிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை