சுப்ரமணிய பாரதி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளியின் நிர்வாகி சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத், நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் ஆகியோர் வாழ்த்தினர்.பள்ளியின் நிர்வாகி சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத் கூறுகையில், 'பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், உயர் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கொம்யூன்கள் அளவிலான பள்ளிகளில் முதன்மை மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருகிறது.மாணவி ஹரிணி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம், காவியா 491, ரசிகா 490 மதிப்பெண் பெற்று 2 மற்றும் 3ம் இடம் பிடித்துள்ளனர். தேர்வில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 450க்கு மேல் 26 பேரும், 400க்கு மேல் 53 பேரும் பெற்றுள்ளனர். பாட வாரியாக தமிழில் ஒருவரும், கணிதத்தில் 2 பேரும், சமூக அறிவியல் 3 பேரும் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் ஒருவரும், அறிவியலில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கல்விப்பணியில் 36 ஆண்டுகளாக நகர்புற பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை வசதிகளை செய்து கிராமப்புற மாணவர்களை கல்வி வளர்ச்சியில் முன்னேற்றிட பாடுபட்டு வருகிறது. எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் 10வது, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனைகள் புரிய ஒத்துழைப்பு அளித்து வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி' என்றனர்.