திடீர் தீ விபத்து
புதுச்சேரி: காமராஜர் சாலையில் மின்சார ஒயர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி, காமராஜர் சாலையில் உப்பனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் செல்லும் மின்சார ஒயர்கள் திடீரென நேற்று மதியம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து பொதுமக்கள் புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள், மின்சாரத்தை நிறுத்த செய்து, தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.