திடீர் மழைமக்கள் மகிழ்ச்சி
அரியாங்குப்பம்:ஒரு வாரமாக சுட்டெரித்த வெயிலை அடுத்து திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில், கடந்த ஒரு வாரமாக கோடை காலம் போல, அனல் காற்றுடன் வெயில் அடித்தது. அதனால், கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளி, கல்லுாரி சென்ற மாணவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். வெயில் காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில், தவளக்குப்பம் பகுதியில் நேற்று மதியம் 2:00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. சுட்டெரித்த வெயிலை தொடர்ந்து மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் நள்ளிரவு ௧௨:௪௦ மணி முதல் பெய்த தொடர் மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது.