உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சினிமா பட பாணியில் தலையை பாலித்தின் கவரால் கட்டி தற்கொலை

சினிமா பட பாணியில் தலையை பாலித்தின் கவரால் கட்டி தற்கொலை

புதுச்சேரி: சினிமா பட பாணியில், தனக்கு தானே பாலித்தின் பையால் தலையை சுற்றி காற்று புகாமல் இருக்க கயிற்றால் கட்டி கொண்டு தற்கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி தர்மாபுரி, தனகோடி நகர், 2வது குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன், 54; கிராபிக் டிசைனர். இவருக்கு 2 மகன்கள். கிராபிக் டிசைனர் தொழிலில் கடந்த 2 ஆண்டுகளாக நஷ்டம் ஏற்பட்டதால், மன வருத்தத்துடன் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலை தேடி சென்ற சத்தியசீலன் மதியம் 2:00 மணிக்கு வீடு திரும்பினார்.குடும்பத்தினரிடம் பேசிவிட்டு மாலை 4:00 மணிக்கு சாப்பிட்டு தனது அறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டார். இரவு 8:00 மணிக்கு சாப்பாடு சாப்பிட சத்தியசீலனை அழைத்து வர அவரது மகன் ஹரிஹரன் சென்றார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், கதவை உடைத்து திறந்தனர்.அப்போது, சத்தியசீலன் தனக்கு தானே முகத்தில் பாலித்தின் கவரை சுற்றி கொண்டு அதில் காற்று புகாமல் இருக்க மொபைல் சார்ஜர் கேபிள் மூலம் இறுக்கமாக கட்டி தரையில் மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக சத்தியசீலனை கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை