| ADDED : நவ 16, 2025 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி ரவுண்ட் டேபிள்கள், ஜெம் மருத்துவமனை மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில், ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரை சாலையில் நடந்தது. நடைபயணத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏரியா 2 உதவியாளர் அசோக், என்.எஸ்.எஸ். மாநில அதிகாரி சதீஷ்குமார், மோதி குமார், ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி ஜெம் மருத்துவமனை, வி.என்.எம். ஜூவல்லரிஸ், ஓஷன் 5 உணவகம், கல்ப் ராஜ் பில்டர்ஸ், ஸ்ரீமான் வித்யாலயா, சிபைபர்நெட், ஹோட்டல் சிதம்பரம் மற்றும் சூரியன் எப்.எம்., ஆகிய ஸ்பான்சர்கள், அரசு துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.