/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிதாசன் அருங்காட்சியத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கல்
பாரதிதாசன் அருங்காட்சியத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கல்
புதுச்சேரி: மன்னர் மன்னன் அறக்கட்டளை சார்பில், கலை, இலக்கிய திங்கள் விழாவில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பாரதிதாசன் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது.கலை, இலக்கிய திங்கள் விழா, பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் 71வது நிகழ்ச்சி நடந்தது. மண்ணாங்கட்டி வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் செயலர் வள்ளி, அமலோற்பவமேரி கிருஷ்ணகுமார் , ரமேஷ் , மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் வாழ்த்தி பேசினார்.விழாவில், மன்னர் மன்னன் அறக்கட்டளை சார்பில், பாரதிதாசன் அருங்காட்சியகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்புக் கருவி வழங்கப்பட்டது.