உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அகல்விளக்கு ஏற்றி ஆதரவு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அகல்விளக்கு ஏற்றி ஆதரவு

புதுச்சேரி: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், முன்னாள் சபாநாயகர் செல்வம் அவரது வீட்டில் அகல் விளக்கு ஏற்றி ஆதரவு தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை தமிழக அரசு, மதுரை மாவட்ட கலெக்டர் நிறைவேற்றாமல், மலை உச்சியில் உள்ளது தீபத்துாண் இல்லை. அது ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட எல்லைக்கல் எனக்கூறி தீபம் ஏற்றவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலம் சார்பில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமையிலான, பா.ஜ., நிர்வாகிகள் மணவெளி தொகுதியில் உள்ள அவரது இல்லத்தில், கையில் அகல் விளக்கு ஏற்றி சரண கோஷமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ