சனி பகவான் கோவிலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தரிசனம்
காரைக்கால்; காரைக்கால் சனி பகவான் கோவிலில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சுவாமி தரிசனம் செய்தார்.காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகாவன் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் வருகை தந்தார். அவரை கலெக்டர் சோம சேகர் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிவன், முருகர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சனீஸ்வர பகவான் சன்னதியில் எள் தீபம் ஏற்றி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். உடன் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர், நீதிபதி வரதராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.